குர்கானைச் சேர்ந்த மயன்ங் குகானி என்ற அந்த குற்றவாளி பலமாதங்களுக்கு முன்பு பாலியல் வன்முறை குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால், அவரோ பாதிக்கப்பட்ட பெண்ணின் மனதை மாற்றி வழக்கை திரும்பப் பெறும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.
அவருடைய திருமண வாக்குறுதியை நம்பி அப்பெண்ணும் வழக்கை திரும்பப் பெற்றார். அதன்பிறகு அப்பெண்ணை திருமணத்தைப் பற்றி பேசவேண்டும் என்று தனியாக அழைத்து கொடூரமாக கொலை செய்ய முயன்றுள்ளார்.
இதுபற்றி பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கேட்டபோது, "அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதால், சமூக தாக்கங்களை கருத்தில் கொண்டு அதற்கு சம்மதம் அளித்தேன். ஆனால், அவரோ திருமணம் பற்றி பேச வேண்டும் என்று அழைத்து என்மேல் கெரசின் ஊற்றி தீவைக்க முயற்சி செய்தார்" என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கில் குற்றவாளியின் மீது 307, 506, 511 ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பொலிஸ் அதிகாரி ஜெய் பிரகாஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply