தகுதியான ஒருவரை தெரிவு செய்து பொது வேட்பாளராக நிறுத்தும் பட்சத்தில்
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியும் என ஜனநாயக் கட்சியின் தலைவர் சரத்
பொன்சேகா தெரிவிக்கின்றார்.
மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை நேற்று மாலை சந்தித்து ஆசிப்பெற்ற சந்தர்ப்பத்திலேயே அவர் இதனைக் கூறினார்.
கடந்த
மே மாதம் வெளியிடப்பட்ட ஜனநாயகக் கட்சியின் கொள்கைப் பிரகடனத்தை மகாநாயக்க
தேரர்களிடம் கையளிக்கும் நோக்கிலேயே சரத் பொன்சேகா அங்கு விஜயம்
செய்திருந்தார்.
முதலாவதாக மல்வத்து பீடத்திற்கு சென்ற பொன்சேகா,
மல்வத்து பீடத்தின் மாகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை
சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.
அதனையடுத்து அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் உடுகம ஸ்ரீ புத்த ரக்கித்த தேரரை சந்தித்து ஆசிப்பெற்றார்.
இதனையடுத்து ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா ஊடகங்களுக்கும் கருத்து தெரிவித்தார்.
சரத் பொன்சேக்கா தெரிவித்த கருத்து :-
“ஜனாதிபதித்
தேர்தலுக்காக எதிர்க்கட்சி மற்றும் அரசியல் கட்சிகள் பொது வேட்பாளர்
ஒருவரை தேடுகின்றன.
தற்போது ஊழல்மிக்க நிர்வாக முறையே காணப்படுகின்றது.
நாட்டை காப்பாற்ற பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும். மக்களின்
தேவையும் இதுவென்றே நான் கருதுகின்றேன்.
எனினும் தற்போது ஜனாதிபதி தேர்தல்
நடைபெறவுள்ளது என அறிக்கப்பட்டால் கட்டாயமாக பொது வேட்பாளர் ஒருவரை தெரிவு
செய்ய வேண்டியுள்ளது. உரிய நேரத்தில் சிறந்த குணங்கள் கொண்ட, மக்களுக்கு
நம்பிக்கையுள்ள உரிய நபரை தெரிவு செய்ய வேண்டும்.
தகுதியான ஒருவரை தெரிவு
செய்யும் பட்சத்தில், பொது வேட்பாளர் வெற்றி பெறுவார் என நான்
எண்ணுகின்றேன்.”
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, May 30, 2014
தகுதியான ஒருவரை நிறுத்தும் பட்சத்தில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியும் – பொன்சேகா
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சாவகச்சேரி நகரசபையால் 74 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொன்விழா மண்டபத்தை இன்று காலை 9.30 மணிக்கு வடக்குமாகாண முதலமைச்சர் க.வி....
-
குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யவென இன்று (10) தொடக்கம் விசேட வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படுவதாக பொலிஸ் திணை...
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்படும் கோபி என்றழைக்கப்படும் பொன்னையா செல்வநாயகம் கஜ...
-
கார் குண்டு வெடிப்புகளில் 25 பொதுமக்கள் பலி பாகிஸ்தான் ரயில் குண்டுவெடிப்பில் 13 பேர் பலி தென் ஆபி...
No comments:
Post a Comment
Leave A Reply