blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Sunday, May 18, 2014

தோட்ட உரிமையாளருடன் மோதல்; தாக்குதலுக்கு இலக்கானவர் உயிரிழப்பு

தோட்ட உரிமையாளருடன் மோதல்; தாக்குதலுக்கு இலக்கானவர் உயிரிழப்புபண்டாரவளை நாயபெத்த தோட்டத்தில் 36 வயதான நபர் ஒருவர் நேற்று பிற்பகல்  கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபருக்கும், தோட்ட உரிமையாளருக்கும் இடையில் காணி தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையின் போது குறித்த நபர் பலத்த தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கானவர் தியதலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் தியத்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.
பண்டாரவளை நாயபெத்த தோட்டத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை பண்டாரவளை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பண்டாரவளை பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►