blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, April 8, 2014

முஸ்லிம்களை உணர்ச்சிகளுக்கு அடிமையாக்குகின்றார்கள்.

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அரசியல் நலன்களுக்காக விலாங்கு மீன்களின் நிலைக்கு ஒரு சில அரசியல் பிரமுகர்கள் தள்ளப்பட்டுள்ளதாக  கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன் தெரிவித்தார்.

சாய்ந்தமருதில்; தலைமைத்துவமும் காலமுகாமைத்துவமும் என்ற தலைப்பிலான நிகழ்வில் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'இற்றைக்கு 04 அல்லது 05 தசாப்தங்களுக்கு முன்னர் இப்பிரதேசத்தில் இருந்த கணவான் அரசியல் கலாசாரம் மாற்றப்பட்டு ஏமாற்று அரசியல் கலாசாரம் மேலோங்கி விட்டது.


மேலும், அரசியல்  நலன்களுக்காகவும் கட்சியின் செல்வாக்கை பாதுகாப்பதற்காகவும் முஸ்லிம் மக்களை ஏமாற்றும் அரசியல் நாடகங்கள்   காலத்துக்குக் காலம்  மேடைகளில் அரங்கேற்றப்படுகின்றன.

இந்நாடகங்களினூடாக  வாக்குகளைப் பெறுவதுடன் நின்றுவிடாது, அரசை விமர்சித்து  முஸ்லிம்களை உணர்ச்சிகளுக்கு அடிமையாக்குகின்றார்கள். இதனால்,  மாற்றுச் சமூகத்தினர் குறிப்பாக பெரும்பான்மை சமூகத்தினர் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலை உருவாகிறது.

வீர வசனங்களோடு  மேடைகளில் காட்சி; கொடுத்துவிட்டு, தனித்துவத்துடன் இருக்கிறோமென்று கூறியவர்கள் மீண்டும் பழைய குருடி கதவைத் திறடியென்ற நிலைக்கு ஆளாகிவிட்டதை மக்கள் அறிவார்கள். அரசோடு இருக்கிறோம்.  அரசுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என்று கிராமங்களில் ஆதரவுப் பேரணி நடத்துகிறவர்கள் நகரத்துச்குச் சென்று அரசை விமர்சித்து கட்சிக்காக வாக்குக் கேட்டு உறுப்பினர்களையும் பெறுகின்றனர்.

இந்த நயவஞ்சக அரசியல் என்றும் நிலைத்திருக்கும் என்று கனவு காண்கின்றவர்களுக்கு காலம் பதில் சொல்ல வெகுகாலம் செல்லாது என்று கூற விரும்புகின்றேன்.

தேர்தலுக்காக மாத்திரம் உரிமை பற்றி பேசுகின்றவர்கள் தேர்தல் முடிந்த கையோடு பேசிவற்றையெல்லாம் மறந்துவிட்டு, வாக்களித்த மக்களின் நலன்களில் அக்கறை கொள்ளாது அவர்களின் துன்ப, துயரங்களில் பங்கெடுக்காது தொடர்ந்தும் மக்களை ஏமாற்றும் அரசியலைப் புரிந்து வருவதைக் காண்கின்றோம்.

நாங்கள் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றோம் என்பதை மக்களாகவே உணராதவரை இவர்கள் தொடர்ந்தும் இந்த ஏமாற்று அரசியலைத் தொடரத்தான் செய்வார்கள்.

முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் நலன்களுக்காக மக்களை ஏமாற்றி அரசோடு இணைந்திருக்கிறது. ஆனால், தேசிய காங்கிரஸ் மக்களின் நலன்களுக்காக அரசோடு இணைந்து நம்பிக்கையோடு செயற்பட்டுக்கொண்டிருக்கிறது என்று கூறிக்கொள்கின்றேன்.

அம்பாறை மாவட்டத்தில் தற்போதுள்ள முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் பிரதிநிதித்துவங்களாலும் முன்னைய அரசியல் பிரதிநிதித்துவங்களாலும் குறிப்பிடத்தக்க எத்தகைய மக்கள் நலன்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன? ஆனால், தேசிய காங்கிரஸினால் மக்களுக்காகச் செய்யும் நலன்கள் கூட மை பூசி அழிக்கப்படும் அநாகரிக அரசியல் சித்தார்த்தங்களே  கல்முனைப் பிரதேசத்தில் நடந்தேறுவதை மக்கள் அறியாமலில்லை என்பதை இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்

தேசிய காங்கிரஸின் மாகாணசபை பிரதிநிதித்துவத்தினூடாக நான் மக்கள் பிரதிநிதியாக வந்;து கல்முனைப் பிரதேசத்தில் மக்களின்; தேவைகளை  பகிரங்கமாகத் திரட்டி அவற்றை நிறைவேற்ற முனையும்போதுதான் அரசியலில் தூக்கிக் கொண்டிருந்தவர்கள் போட்டி போட்டு அபிவிருத்திப் பணிகளை புரிகின்றனர். இதையிட்டு எனது ஆத்மா சாந்தியடைகிறது.

மக்களின் நலன்களை யார் நிறைவேற்றினாலும் அவை மக்களுக்கே போய்ச் சேரும். ஆனால், தங்களது அரசியல் இருப்பு கேள்விக்குள்ளாகிவிடுமென்று நினைத்து அதற்கு தடையாக விருப்பது அவர்களது அரசியல் பயணத்திற்கு தடையாக இருக்கும் என்பதை இத்தகையவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அதுமாத்திரமின்றி, அரசுக்கு ஒரு முகத்தையும் மக்களுக்கு இன்னுமொரு முகத்தையும் காட்டும் விலாங்கு மீனின் நிலையில்லாது மக்களின் நலன்களுக்காக ஒரு கொள்கையின் கீழ் செயற்படுமாறு அத்தகைய அசியல் பிரமுகர்களிடம் இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்' என்றார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►