blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Sunday, April 6, 2014

நீரிழிவு மருத்துவம்

சமீப காலமாக நீரிழிவு மருந்துகளுக்குத் தடை விதிப்பது அதிகரித்திருக்கிறது. இத்தனை வருடங்களாக மாத்திரைகள் எடுத்துக் கொள்கிற என்னைப்  போன்றவர்களுக்கு அதனால் ஏதேனும் பாதிப்பு வருமா?

விளக்கம் அளிக்கிறார் நீரிழிவு மருத்துவர் முகேஷ்...

நீரிழிவு என்பது ஒருவகையான மெட்டபாலிக் டிஸ்ஆர்டர். அதன் விளைவாக ரத்தத்தில் அதிகரிக்கக்கூடிய சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்பட  வேண்டும். பெரும்பாலான மக்கள் நீரிழிவின் ஆரம்ப அறிகுறிகளை அலட்சியமாக விட்டு விடுகிறார்கள். ஆரம்பத்தில் குறைபாடாக இருக்கும் பிரச்னை,  நோயாக முற்றும்வரை விட்டுவிட்டு, பிறகு அத்துடன் போராட ஆரம்பிக்கிறார்கள். 

எந்த ஒரு குறைபாட்டுக்கும் நோய்க்கும் 2 விஷயங்கள் முக்கியம். சரியான நேரத்தில் கண்டுபிடிப்பதும், அதை அலட்சியம் செய்யாமல் கவனிப்பதும். நீரிழிவு வரலாம் என எச்சரிக்கப்படுகிறவர்களும், அதன் ஆரம்பகட்டத்தில் இருப்பவர்களும் உணவுக்கட்டுப்பாடு, நடைப்பயிற்சி மற்றும் சிறிய  உடற்பயிற்சிகளின் மூலம் அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம். ஆனாலும், ஒரு கட்டத்தில் ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த அவர்களுக்கு மருத்துவம் அவசியமாகும். 

நீங்கள் நினைப்பதைப் போல வருடக்கணக்கில் நீரிழிவுக்காக மருந்துகள் எடுத்துக் கொள்வோருக்கு பாதிப்புகள் வருவதாக இதுவரை ஆதாரப்பூர்வமாக  எந்தத் தகவலும் இல்லை. நீரிழிவு மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கும் எந்த விஞ்ஞானப் பூர்வ ஆதாரங்களும் இல்லை. நீரிழிவு  மருந்துகளில் சேர்க்கப்படுகிற மிக முக்கியமான ஒன்றான ‘பயோகிளிட்டஸோன்’ என்பதுதான் ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதில்  முக்கிய வேலையைச் செய்கிறது. கவலை வேண்டாம்!

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►