வனராஜா தோட்டத்தில் வசிக்கும் 40 வயதுடைய ஆன்டி மாரியாய் என்பரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வனராஜா தேயிலை தொழிற்சாலையில் தொழில் புரியும் இவர் திருமணமாகாதவராவார் என்பதுடன் தனது சகோதரியின் வீட்டில் சிறு வயது முதல் வாழ்ந்து வந்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் குளிக்க சென்றவர், இரண்டு மணியளவில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்ததாக இவரின் சகோதரியின் கணவர் தெரிவித்தார்.
சடலம் தற்போது டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply