இந்தியாவின் பெங்களூர் நகரிற்கு புறப்பட்ட மலேசிய விமானம் ஒன்று
தரையிறக்க கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மீண்டும் மலேசியாவிலேயே
தரையிறக்கப்பட்டுள்ளது.
நேற்று மலேசியாவில் இருந்து 166 பயணிகளுடன்
பெங்களூர் நகரை நோக்கிப் புறப்பட்ட போயிங் 737 ரகத்தைச் சேர்ந்த, MH 192
என்ற விமானமே மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக
தீயணைப்பு படையினர் உடனடியாக விமான நிலைய ஓடுபாதையை அடைந்தனர். எனினும்
அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை என மலேசிய அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 239 பயணிகளுடன் புறப்பட்ட விமானம்
காணாமல் போயுள்ள நிலையில் இந்த சம்பவங்கள் பயணிகள் மத்தியில் அச்சத்தை
ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply