சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள்
மீண்டும் கொழும்பிற்கு திரும்ப ஏதுவாக விசேட ரயில் சேவைகள் இன்றும்
முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதிக மக்கள் வருகை தரும் பட்சத்தில் மேலதிக
ரயில்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக
ரயில்வே
அத்தியட்சகர் எல்.ஏ.ஆர்.
ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.
இதேவேளை, புத்தாண்டை முன்னிட்டு சொந்த
இடங்களுக்குச் சென்ற மக்களின் வசதி கருதி இன்று முதல் விசேட பஸ் சேவை
முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
நாட்டின் முக்கிய நகரங்களிலிருந்து எதிர்வரும் 22 ஆம் திகதி வரை இந்த பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
வெள்ளிக்கிழமை,
சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் கொழும்பிற்கு அதிகளவு
மக்கள் வருகை தருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதால், அது குறித்து
ஆராய்வதற்காக அதிகாரிகளை பல பகுதிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளதாக தேசிய
போக்குவரத்து ஆணைக்குழு சுட்டிக்காட்டுகின்றது.
No comments:
Post a Comment
Leave A Reply