blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, April 8, 2014

விடுதலைப் புலிகள் இயக்க முக்கிய உறுப்பினர் கைது

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் செயல்பட்டதாகக் கூறப்படும் முக்கிய உறுப்பினர் சுப்ரமணியம் கபிலன் என்பவரை இலங்கைப் போலிசார் கைது செய்திருக்கிறார்கள்.

இது குறித்து இலங்கைப் போலிஸ் துறைக்காகப் பேசவல்ல அஜித் ரோஹன பிபிசியிடம் பேசுகையில், நந்தகோபன் என்று விடுதலைப்புலிகளால் அழைக்கப்பட்ட, சுப்ரமணியம் கபிலன் , யாழ்ப்பாணம் ஏழாலை கிழக்குப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், இவர் 1990-ம் ஆண்டில் இருந்து புலிகள் இயக்கத்தில் செயல்பட்டிருக்கிறார். பின்னர், 2009-ம் போலிக் கடவுச் சீட்டின் மூலம் மலேசியாவுக்குச் சென்றார். அதன் பிறகு, 2013-ம் ஆண்டில் மலேசியாவிலிருந்து போலி கடவுச் சீட்டின் மூலம் பிரிட்டனுக்குச் செல்ல முயன்றபோது, அவர் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அதன் காரணமாக, அவருக்கு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் இலங்கைக்கு மீண்டும் திருப்பியனுப்பப்பட்டுள்ளார். அதன்படி தான் இவர் கடந்த மார்ச் 6-ம் திகதி கைதுசெய்யப்பட்டார் என்றார் அஜித் ரோஹன.

விடுதலைப் புலிகள் அமைப்பில் இவர் எந்தளவுக்கு முக்கியமான உறுப்பினராகச் செயற்பட்டார் என்று கேட்டதற்கு, அஜித் ரோஹன, இவர் புலிகள் இயக்கத்தின் ஊடகத்துறைக்கு பொறுப்பாக சில காலம் பணியாற்றியுள்ளார். 1991-ம் ஆண்டில் ஆனையிறவு முகாம் தாக்குதலில் பங்கெடுத்துள்ளார். இவருக்கு எதிராக பகிரங்க பிடியாணை ஒன்று இலங்கையில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்தது. இவருக்கு எதிராக இப்போது வழக்குத் தொடுக்க வாய்ப்புகள் இருக்கின்றன. இப்போது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றார்.


இவரைப் போல இன்னும் எவரேனும் கைதுசெய்யப்பட்டு, ஊடகங்களுக்கு தகவல்கள் வராமல் இருக்கின்றதா என்று கேட்டதற்கு பதிலளித்த அவர், இன்னும் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் ஏதாவது விதத்தில் தேசிய ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சித்தவர்கள் தொடர்பில் பல்வேறு நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களைப் பற்றி விசாரணைகள் நடக்கின்றன. அதன்மூலம் கிடைக்கும் தகவல்களை வைத்துதான் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►