எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, August 7, 2014
"அம்மா" உணவகங்கள் எப்படி? - கலைஞர் பதில்
கேள்வி :- "அம்மா" உணவகங்கள் எப்படி?
கலைஞர் பதில்:- - அதுபற்றி நான் கூறினால் நம்ப மாட்டீர்கள். ".
“There’s trouble cooking at Amma Canteens in City” " (http://timesofindia.indiatimes.com/india/Scent-of-trouble-at-Amma-canteens/articleshow/38516385.cms) என்ற தலைப்பில் "டைம்ஸ் ஆப் இந்தியா" ஆங்கில நாளேடு 17-7-2014 அன்று முதல் பக்கத்திலேயே வெளியிட்டிருந்ததைக் கூறுகிறேன்.
("மாநகர் "அம்மா"உணவகங்களில் பிரச்சினை" - என்ற தலைப்பில் "டைம்ஸ் ஆப் இந்தியா"" ஆங்கில நாளேடு, 17-7-2014 அன்று வெளியிட்டுள்ள செய்தியில், "பலதரப்பு மக்களிடமும் பாராட்டைப் பெற்ற "அம்மா"" உணவகங்கள் தற்போது எதிர்மறை கவனத்திற்கு உள்ளாகியிருக்கின்றன.
சென்னை மாநகராட்சியின் புலனாய்வுத் துறை "அம்மா"உணவகங்களின் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்து வருகிறது. "அம்மா" உணவகங்கள் தொடங்கப்பட்டு ஓராண்டாகிறது.
அந்த உணவகங்களின் செயல்பாடுகளில் பல்வேறு வகையான முறைகேடுகளை மாநகராட்சியின் புலனாய்வுத் துறை கண்டு பிடித்துள்ளது.
கணக்கு வைப்பதிலிருந்து காய்கறிகள் வாங்கிப் பயன்படுத்துவது வரை முறைகேடுகள் நடைபெறுகின்றன. "அம்மா" உணவகங்களுக்காக வாங்கப்படும் காய்கறிகள் வெளியே விற்பனை செய்யப்படுகின்றன.
ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை யிலும், ராயபுரம் எஸ்.என். செட்டித் தெருவிலும் உள்ள "அம்மா" உணவகங்களை மாநகராட்சியின் புலனாய்வுத் துறையினர் சென்ற வாரம் ஆய்வு செய்தனர்.
புலனாய்வுத் துறையின் அதிகாரி ஒருவர், "அம்மா உணவகங்களின் பணியாளர்களுக்கான வருகைப் பதிவேடு எதுவும் பராமரிக்கப்படவில்லை. காய்கறிகளுக்கும், சமைப்பதற்காகப் பெறப்படும் ஏனைய பொருள்களுக்கும் முறையான கணக்குகள் பராமரிக்கப்படவில்லை" என்று கூறியிருக்கிறார்.)
"அம்மா" உணவகங்களின் முறைகேடுகள் பற்றிய லட்சணம் இப்போது இதுதான்! மேலும் அங்கே உள்ள காய்கறிகள் எல்லாம் சில பணியாளர்களால் வெளி மார்க்கெட்டில் விற்கப்படுகிறதாம்.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
நைஜிரியாவில் கடத்தப்பட்ட பெண்கள் திருமணத்திற்கென விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போஹோ ஹராம் ஆயதாரிகளால் கடத்தப்பட்...
-
சாவகச்சேரி நகரசபையால் 74 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொன்விழா மண்டபத்தை இன்று காலை 9.30 மணிக்கு வடக்குமாகாண முதலமைச்சர் க.வி....
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்படும் கோபி என்றழைக்கப்படும் பொன்னையா செல்வநாயகம் கஜ...
-
மாத்தளை மற்றும் பதுளை மாவட்டம் - தபால்மூல வாக்கு முடிவுகள்:
No comments:
Post a Comment
Leave A Reply