பணத்திற்காக உடலுறுப்புகளை கடத்தி
விற்க்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறிவருவதாக அமெரிக்க
செய்தித்தாளோன்று தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கிலிருந்து சிறுநீரகத்தை பெறுவதற்காக பலர் இலங்கை செல்வது
தனது விசாரணைகளின் போது தெரியவந்ததாக அந்த செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
உடலுறுப்புகளை கடத்தி விற்கும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என சந்தேகிக்கப்படும் முன்னாள் காப்புறுதி முகவரான அவிகட் சன்டௌர் என்பவரின் ஆலோசனைக்கு ஏற்ப இஸ்ரேலை சேர்ந்த ஓப்ரா டொரின் என்பவர் சிறுநீரகங்களை பெறுவதற்காக இலங்கை சென்றார்.
சன்டௌர் தான் இவ்வாறு சிறுநீரகங்களை பெறுவதற்காக பலரை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாகவும், இதற்காக நபர் ஒருவரிடமிருந்து 200.000 அமெரிக்க டொலர்களை கட்டணமாக பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர் தனது இஸ்ரேலிய பணத்தை அமெரிக்க டொலராக மாற்றுவதற்கா நபர் ஒருவரிடம் சென்ற வேளை அவர் தனது உறவினரும் இலங்கையிலிருந்து இதைவிட குறைந்த கட்டணத்திற்கு சிறுநீரகங்களை பெற்றதாக தெரிவித்துள்ளதுடன் தன்னால் அதற்கு ஏற்பாடு செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
எனினும் அடுத்த சில தினங்களில் இந்தக் கும்பலை, உடலுறுப்புகளை கடத்தி விற்கும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என்ற சந்தேகத்தில், இஸ்ரேலிய பொலிஸார் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply