நேற்று வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு இடம்பெற்ற இச்சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த ரஞ்சன் ரமணன் (வயது 26) என்ற இளைஞனே இவ்வாறு படுகாயமடைந்தார்.
நான்கு பேர் கொண்ட இனந்தெரியாத குழுவினரே தாக்குதல் மேற்கொண்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
கழுத்திலும் கால்களிலும் காயமடைந்த இவர், வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
இது தொடர்பாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment
Leave A Reply