இலங்கை முஸ்லிம்களுக்குள் பீதியை ஏற்படுத்தக்கூடிய செய்தியை தொலைபேசி குறுஞ்செய்தி (SMS) மூலம் பரப்பினர் எனக் குற்றம் சாடப்பட்டு நான்கு முஸ்லிம்கள் கொழும்பில் கைது செய்யப்பட்டனர்.
இவர்களை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என பி.பி.ஸி. தெரிவித்தது.
இந்த நான்குபேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொலிஸார் இனவாதத்தை துண்டும் SMS செய்தியொன்று முஸ்லிம் மக்களிடையே பரப்பப்பட்டு வருகின்றன எனத் தங்களுக்கு தகவல் கிடைத்தது எனவும் அது குறித்து தாங்கள் தங்களின் விசாரணைகளை ஆரம்பித்தனர் எனவும் கூறினர்.
சம்பந்தப்பட்ட sms செய்திகள் இந்த நான்கு சந்தேக நபர்களின் கைதொலைபேசிகள் ஊடாகவே அனுப்பப்பட்டுள்ளன எனத் தெரிவித்த பொலிஸார், சந்தேகநபர்கள் சர்வதேச ரீதியல் வைத்திருக்கும் தொடர்புகள் சம்பந்தமாகவும் தாங்கள் தற்போது விசாரித்து வருகின்றனர் எனவும் அறிவித்தனர்.
இந்த விசாரணைகள் முடியும்வரை இவர்களை விளக்க மறியலில் வைக்குமாறும் பொலிஸார் நீதிவானிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
பொலிஸாரின் இந்த வேண்டுகோளுக்கு எதிர்ப்புத் தெரிவித்த எதிர்தரப்பு சட்டத்தரணிகள் தமக்குக் கிடைத்த செய்தியொன்றை தம் நண்பர்களிடையே பகிர்ந்தளிப்பது ஒரு குற்றச் செயல் அல்ல என்று வாதிட்டனர்.
'லங்கா ஈநியூஸ்' என்கிற இணையதளத்தில் கடந்த 30ஆம் திகதி பிரசுரிக்கப் பட்டிருந்த செய்தியொன்றையே இவர்கள் இவ்வாறு sms மூலம் பகிர்ந்தனர் என்று கூறிய எதிரி தரப்பு சட்டத்தரணி எம்.எம்.சுகயிர் பொலிஸாரின் இந்தக் கைது நடவடிக்கையை அனுமதிக்கக் கூடாது என்று வாதாடினார்.
வழக்கு விசாரணையின் இறுதியில் இந்த நால்வரையும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிவான் அன்றைய தினம் பொலிஸாரின் விசாரணைகளின் முன்னேற்றங்கள் தொடர்பான அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.
பி.பி.ஸி.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, August 7, 2014
இணையச் செய்தியை கைபேசியில் பரப்பிய 4 முஸ்லிம்கள் கைது!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
நைஜிரியாவில் கடத்தப்பட்ட பெண்கள் திருமணத்திற்கென விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போஹோ ஹராம் ஆயதாரிகளால் கடத்தப்பட்...
-
சாவகச்சேரி நகரசபையால் 74 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொன்விழா மண்டபத்தை இன்று காலை 9.30 மணிக்கு வடக்குமாகாண முதலமைச்சர் க.வி....
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்படும் கோபி என்றழைக்கப்படும் பொன்னையா செல்வநாயகம் கஜ...
-
மாத்தளை மற்றும் பதுளை மாவட்டம் - தபால்மூல வாக்கு முடிவுகள்:
No comments:
Post a Comment
Leave A Reply