blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, July 26, 2014

இராஜசிங்க மன்னனின் கருவூலப் பெட்டகம் அமைச்சர் எஸ்.பியின் வீட்டில் புதைந்துள்ளது!

இராஜசிங்க மன்னனின் கருவூலப் பெட்டகம் அமைச்சர் எஸ்.பியின் வீட்டில் புதைந்துள்ளது!கண்டி இராச்சியத்தை ஆட்சி செய்த இராஜசிங்க மன்னனுக்கு சொந்தமான கருவூலப் பெட்டகம் ஒன்று ஹிங்குரான்கெத்தவில் உள்ள உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்கவுக்கு சொந்தமான வீடு அமைதிருக்கும் பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக அகழ்வாராய்ச்சி திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி செனரத் திஸநாயக்க தகவல் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து வெளியிடுகையில் இலங்கையின் வரலாற்றை எழுதிய றொபேர்ட் நொக்ஸின் நூலிலேயே இந்தத் தகவல் கிடைத்தது எனக் கூறிய அவர் முன்னர் அகழ்வாராய்ச்சித் திணைக்களத்தின் தலைவராக இருந்த ஈ.ஏ.பி. தெரணியகல இங்கு ஆராய்ச்சி செய்ய முற்பட்டபோதும் அதற்கு அமைச்சர் திஸநாயக்க அனுமதிக்கவில்லை என்று கூறினார்.

மேலும் திஸநாக்கவின் வீடு இருக்கும் இடம் முன்னர் இராஜசிங்க மன்னனின் கருவூல அதிகாரியின் வாசஸ்தலமாக இருந்தது என்றும் றொபேர்ட் நொக்ஸின் குறிப்பின்படி அந்த இடத்தில் இராஜசிங்க மன்னன் பயன்படுத்திய ஆயுதங்கள், உடைகள், ஆபரணங்கள் மற்றும் வேறுபொருட்கள் இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இப்போது மீண்டும் அந்த இடத்தை ஆராய்ச்சி செய்ய அமைச்சர் திஸநாயக்காவிடம் அனுமதி கோரியுள்ளதாகவும் கிடைக்கும் பட்சத்தில் நாட்டுக்கு சொந்தமான பெரும் வரலாற்றுப் பொக்கிஷம் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இராஜசிங்க மன்னன் கி.பி 1635 தொடக்கம் 1687 வரை கண்டி இராச்சியத்தை ஆட்சி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►